Friday, May 2, 2014

உலக தொழிலாளர் தினத்தையொட்டி ஒரேஞ் டீ கம்பனியின் கிறிக்கட் போட்டியில் ஒரேஞ் நீல அணி வெற்றி

( சாய்ந்தமருது நிருபர்)
உலக தொழிலாளர் தினத்தையொட்டி ஒரேஞ் டீ கம்பனி கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி மைதானத்தில் இன்று சினேகபுர்வமான கிறிக்கட் போட்டியொன்றினை ஒழுங்கு செய்திருந்தது.
ஒரேஞ் டீ கம்பனி முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.ஏ.நாஸர் தலைமையில் இடம்பெற்ற ஒரேஞ் சிவப்பு அணியினருக்கும்
ஒரேஞ் நீல அணியினருக்குமிடையிலான கிறிக்கட் போட்டியில் ஒரேஞ் நீல அணியினர் வெற்றி பெற்றனர் .
ஒரேஞ் டீ கம்பனியில் கடமை புரியும் உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
வெற்றிபெற்ற அணியினருக்கு கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.ஏ.நாஸர் வெற்றிக் கிண்ணத்தினை வழங்கி வைத்தார்.






No comments:

Post a Comment