Friday, May 2, 2014

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக்கூட்டம் அம்பாரையில் நடைபெற்றது.



( அம்பாறை நிருபர்)
க்கிய தேசியக் கட்சியின் மே தினக்கூட்டம் நேற்று மாலை அம்பாரையில் நடைபெற்றது.
க்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் அம்பாரை பஸ்; நிலையத்திற்கருகில் நடைபெற்ற இக்கூட்டத்திலும் பேரணியிலும் நாட்டின் பல பாகங்களிலிமிருந்தும் வருகைதந்திருந்த ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க, தவிசாளர் கபீர் ஹாஷிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைகல் பெரேரா, மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியல்ல, ஹரீன் பெர்னான்டோ, அகில விராஜ் காரியவசம், இரான் விக்ரம ரத்ன, பீ.ஹரிஸன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




 

No comments:

Post a Comment