Friday, May 2, 2014

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் சம்பியன்


( மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் 276 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.சந்திரகுமாரின் ஏற்பாட்டில் வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் தலைமையில் நேற்று முன்தினம் புதன் கிழமை மாலை  மகிழடித்தீவு பொது விளையாட்டு
மைதானத்தில் மட்டக்களப்பு மேற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.

ஆண்டு ஒன்று முதல் ஆண்டு 13 வரையான பாடசாலைகளுள் 276 புள்ளிகளைப் பெற்று அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் மதலாமிடத்தினையும் 183 புள்ளிகளைப் பெற்று கன்னன்குடா மகாவித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் 161 பள்ளிகளைப் பெற்று கொக்கட்டிச்சோலை ஆர்.கே.எம்.வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளது.

இதே வேளை விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ள பாடசாலைகளுள் 64 புள்ளிகளைப் பெற்று கன்னன்குடா மகாவித்தியாலயம் முதலாமிடத்தினையும் 57 புள்ளிகளைப் பெற்று அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் 53 புள்ளிகளைப் பெற்று கொக்கட்டிச்சோலை ஆர்.கே.எம்.வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளது.

ஆண்டு 1 முதல் 11 வரையான பாடசாலைகளுள் 98 புள்ளிகளைப் பெற்று கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 91 புள்ளிகளைப் பெற்று கடுக்காமுனை வாணி வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் 81 புள்ளிகளைப் பெற்று பன்சேனை பாரி வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளது.

ஆண்டு 1 முதல் 5 வரையான பாடசாலைகளுள் 25 புள்ளிகளைப் பெற்று மகிழவெட்டுவான் கந்தப்போடி வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 10 புள்ளிகளைப் பெற்று நரிப்புல்தோட்டம் நடேஸ்வரா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளது.

இப் போட்டியில் மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.







No comments:

Post a Comment