Friday, May 2, 2014

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக்கூட்டம் அம்பாரையில் நடைபெற்றது.



( அம்பாறை நிருபர்)
க்கிய தேசியக் கட்சியின் மே தினக்கூட்டம் நேற்று மாலை அம்பாரையில் நடைபெற்றது.
க்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் அம்பாரை பஸ்; நிலையத்திற்கருகில் நடைபெற்ற இக்கூட்டத்திலும் பேரணியிலும் நாட்டின் பல பாகங்களிலிமிருந்தும் வருகைதந்திருந்த ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

உலக தொழிலாளர் தினத்தையொட்டி ஒரேஞ் டீ கம்பனியின் கிறிக்கட் போட்டியில் ஒரேஞ் நீல அணி வெற்றி

( சாய்ந்தமருது நிருபர்)
உலக தொழிலாளர் தினத்தையொட்டி ஒரேஞ் டீ கம்பனி கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி மைதானத்தில் இன்று சினேகபுர்வமான கிறிக்கட் போட்டியொன்றினை ஒழுங்கு செய்திருந்தது.
ஒரேஞ் டீ கம்பனி முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.ஏ.நாஸர் தலைமையில் இடம்பெற்ற ஒரேஞ் சிவப்பு அணியினருக்கும்
ஒரேஞ் நீல அணியினருக்குமிடையிலான கிறிக்கட் போட்டியில் ஒரேஞ் நீல அணியினர் வெற்றி பெற்றனர் .
ஒரேஞ் டீ கம்பனியில் கடமை புரியும் உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
வெற்றிபெற்ற அணியினருக்கு கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.ஏ.நாஸர் வெற்றிக் கிண்ணத்தினை வழங்கி வைத்தார்.






மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் சம்பியன்


( மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் 276 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.சந்திரகுமாரின் ஏற்பாட்டில் வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் தலைமையில் நேற்று முன்தினம் புதன் கிழமை மாலை  மகிழடித்தீவு பொது விளையாட்டு

கல்முனையில் களைகட்டிய அக்சய திருதியை தினம்



( வீ. ரீ. சகாதேவராஜா)
அக்சய திருதியை தினத்தையொட்டி இன்று மே 2ம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை மாநகரிலுள்ள நகைமாளிகைகள் வாழைதோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
கல்முனை பிரதேசத்திலுள்ள நகைக்கடைகளில் மக்கள் நகைகள் கொள்வனவு செய்வதில் மிகவும் அக்கறை காட்டினார்கள்.