Saturday, December 22, 2012

பசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு .


கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில்   பசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது
விழாவுக்கு பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்து கொண்டார் அந்நிகழ்வின் போது அம்பாரை மாவட்டத்துக்கு மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சிறந்த திண்மக்கழிவு அகற்றும் சேவைக்கான விருதும்
அம்பாரை பொது வைத்தியசாலைக்கு  சிறந்த  இயக்கமான வைத்தியசாலை விருதும்
மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்க்கு சிறந்த கல்விக்கூட விருதும் கிடைத்துள்ளன.
இந்நிகழ்வுக்கு பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்
அம்பாரை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சி உதவி அணையாளர் முஹம்மட் இர்ஷாத் , மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.ஏ. நஜீப் ,அம்பாரை மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி ,  அட்டாளைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர் எம்.ஏ.அன்சில் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் மற்றும் யுனொப்ஸ் நிறுவன உத்தியோகத்தர்களும் பங்கு பற்றினர்.




No comments:

Post a Comment