Wednesday, December 26, 2012

இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததானநிகழ்வு..


ஸ்ரீலங்கா யுனைட்ஸ் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை மற்றும் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பங்களிப்புடன் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான நிகழ்வொன்றினை இன்று மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்திருந்தனர்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாளிகைக்காடு , சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேச தமிழ் , முஸ்லிம் மக்கள் இன்று இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றனர்.
கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு அதிகளவிலான இளைஞர்கள் இரத்ததானம் செய்வதில் பெரும் பங்கினை வகித்தனர்.
நேற்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தின் போது பங்கேற்ற பொதுமக்களுக்கும் அதனை ஒழுங்கு செய்த சாய்ந்தமருது சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் உள்ளீட்ட பொது சுகாதார பரிசோதர்களுக்கும் ,இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்ற மக்களுக்கும் இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய இளைஞர்களுக்கும் அனுசரணையாளர்களுக்கும் வைத்திய அதிகாரிகளுக்கும் தாதியருக்கும் ஸ்ரீலங்கா யுனைட்ஸ் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் , கல்லூரி அதிபர் ஏ. ஆதம்பாவா ஆகியோர்  தமது நன்றிகளை தெரிவித்தனர்.






No comments:

Post a Comment