Thursday, December 27, 2012

சாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருடாந்த கலைவிழா.


சாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய நூற்றாண்டு ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
முன்பள்ளி அதிபர் றிபாயா ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும் ,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர். ஏ.ஏ.பஸீர், பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.தாஜூடீன், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.ரஹீம், பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் அதிகாரி அஷ்-ஷேய்க் ஐ.எல்.எம். அனீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்  மற்றும் அதிகாரிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் . ஏ.ஆர்.எம். பாலர் பாடசாலையில் கல்விகற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசில்களும் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டதோடு, ஏ.ஆர்.எம். பாலர் பாடசாலையின் ஆலோசகர் ஏ.எல்.எம்.ஹனிபாவினால் பிரதம அதிதிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.






No comments:

Post a Comment