Sunday, December 9, 2012

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்கு செய்திருந்த க.பொ.த.சாதாரணதர மாணவர் தினவிழா


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்கு செய்திருந்த க.பொ.த.சாதாரணதர மாணவர் தினவிழா ,கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் பகுதித்தலைவர் எம்.ஜெமீல்  தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஒரேஞ் ரீ கம்பனி ( பிரைவட்) லிமிடட் முகாமைத்துவ பணிப்பாளர் சாமஸ்ரீ அல்ஹாஜ் ஏ.எல்.ஏ. நாஸர் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் அல் ஹாஜ் ஐ.எல்.ஏ.றஹீம் , கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா , வலய அதிபர் ஏ.எச்.எம்.அமீ்ன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம்.நௌபர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
பரீட்சைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் இந்நிகழ்வின் போது பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரியன் பழைய மாணவரும் ஒரேஞ் ரீ கம்பனி ( பிரைவட்) லிமிடட் முகாமைத்துவ பணிப்பாளருமான  சாமஸ்ரீ அல்ஹாஜ் ஏ.எல்.ஏ. நாஸர் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.












No comments:

Post a Comment