Sunday, December 9, 2012

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவர்களின் வருடாந்த விடுமுறை தின நிகழ்வுகள்.


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவர்களின் வருடாந்த விடுமுறை தின நிகழ்வுகள் கல்லூரி திறந்தவெளியரங்கில் இன்று பகுதித்தலைவர் எம்.எஸ்.அலிகான் தலைமையில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.
காலை நிகழ்வுகளுக்கு ஜெய்கா திட்ட பிரதம ஆலோசகர் அல்ஹாஜ் எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல் பிரதம அதிதியாகவும் மாலை நிகழ்வுகளுக்கு டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக் பிரதம அதிதியாகவும்  கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா கௌரவ விருந்தினராகவும் உதவி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட் , ஏ.எச்.எம்.அமீன் மற்றும் ஓய்வு பெற்ற கல்வியல் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
காலை 8.00 மணிக்கு கிறிக்கட் கண்காட்சி போட்டியுடன் ஆரம்பமான நிகழ்வுகள் வினோத விளையாட்டுக்கள் மற்றும் தீப்பாசறையுடன் இரவு 10.00 மணிக்கு நிறைவு பெற்றது.
மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டியதுடன் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
பெருந்திரளான மாணவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
கல்லூரி வரலாற்றில் இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும்.







No comments:

Post a Comment