Sunday, December 9, 2012

மனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக்கு காரணம்! (செய்தித் துளிகள்)


மனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக்கு காரணம்! (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 09 டிசெம்பர் 2012, 01:35.16 PM GMT ]
அம்பாறை தமன பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி நிலத்தின் கீழ் ஏற்பட்ட அதிர்வுகள் அல்லவென அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த வாரங்களில் வடினாகல, தேவாலஹிந்த மற்றும் பல்லங்கல உள்ளிட்ட பகுதிகளில் சிறியளவிலான அதிர்வுகள் உணரப்பட்டன.
இதுகுறித்து ஆராய்வதற்காக, புவியியல் மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்தின் விசேட குழுவொன்று கடந்த 3 ம் திகதி அந்தந்த பிரதேசங்களுக்கு சென்று ஆய்வுகளை நடத்தியது.
இதன்போது, புவியதிர்வை அளவிடும் கருவிகளை பொருத்துவதற்கும் அந்த குழு நடவடிக்கை எடுத்திருந்தது. நேற்று மாலையும் தமன பகுதியில் இடம்பெற்ற புவியதிர்வும் ஒரு அலகாக கருவியில் பதிவாகியிருந்தது.
குறித்த அதிர்வுகள் மனித செயற்பாடுகளினால் ஏற்பட்டவை என்றும் இயற்கையாக இடம்பெறவில்லை என்றும் புவியியல், சுரங்க அகழ்வு நிறுவுவகத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மஹிந்த செனவிரட்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment