Wednesday, December 26, 2012

”தேசத்திற்கு மகுடம்”



”தேசத்திற்கு மகுடம்” தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய பயலுனர் கைத்தொழில் அதிகார சபையின் ( நைட்டா) ஏற்பாட்டின் பேரில் முன்னறிவை இனங்கண்டு அங்கீகரித்தல் ( RPL)  முறையினூடாக தேசிய தொழில் தகைமை சான்றிதழ்( NVQ)  ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கான முன்னோடி பரீட்சைக்கான கலந்துரையாடல் இன்று காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிலைய பொறுப்பதிகாரியும் மதிப்பீட்டாளருமான ஐ.எல்.எம்.இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையின் முகாமையாளர் ஏ. மசூர் , போதானாசிரியர்களும் மதிப்பீட்டாளர்களுமான எம்.ஏ.மாஹிர் , எஸ்.ஆனந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி திட்டத்தினை முன்னிட்டு நடாத்தப்படவுள்ள இச்சான்றிதழ் பரீட்சையில் (NVQ) தச்சுத்தொழிலாளர்களுக்கான ( மரக்கைவினைஞர்) மதிப்பீட்டுப்  பரீட்சைக்கான செயலமர்வே இன்று இடம்பெற்றது.
இச்செயல்திட்டத்தினூடாக பல துறைகளிலும் அனுபவமுள்ள  பலர் அம்பாறை , மட்டக்களப்பு , திருகோணமலை மற்றும் பொலநறுவ மாவட்டங்களிலிருந்து மாவட்டத்திற்கு தலா 250  பயிலுனர்கள் வீதம் 1000 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.




No comments:

Post a Comment