Monday, December 3, 2012

பிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்பலம்

கபடத்தனமான யுக்தி மூலம் பணம் பதுக்கி வைப்பு
* நிதி, வங்கி மதிப்பீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி
பிரதம நீதியரசருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப் பிரேரணை இன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ப்படவுள்ளது. கைவசம் உள்ள பெருமளவு சொத்துக்களை மறைத்து வைப்பதற்காக பிரதம நீதியரசர் தனது நிதி விவகாரங் களில் கபடத்தனமாக கையாளும் யுக்தியை கடைப்பிடித்திருப்பதை அவதானித்த நிதி, வங்கி மதிப்பீட்டாளர்களும் சுயாதீனமான பார்வையாளர்க ளும் அதிர்ச்சியும் திகைப்பூட்டும் அச்சமும் அடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசரின் வங்கிக் கணக்குகளில் மார்ச் முதலாம் திகதி அல்லது டிசம்பர் முதலாம் திகதியன்று நிலுவையில் பூஜ்ஜியக் கணக்கே இருந்திருப்பதை நிதி ஆய்வாளர்கள் பல சந்தர்ப்பங்களில் அவதானித்துள்ளார்கள்.
எனினும் இந்த குறிப்பிட்ட திகதிகள் கடந்தவுடன் இந்தக் கணக்குகளில் வழமைப் போல் இலட்சக்கணக்கான பணம் வைப்பில் வைக்கப்பட்டது. இது சொத்து மற்றும் வரி மதிப்பீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்காத வகையில் மேற்கொள்ளப்பட்ட புத்திசாதுர்யமான செயற்பாடு என்று கருதப்படுகின்றது.
பிரதம நீதியரசர் தனது முழு சொத்துவிபரங்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதற்காக மேற்கொள்ள ப்பட்ட இந்த செயற்பாடு மோசடியான முறையில் பணத்தை வைத்து சொத்து விபரங்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதற்கு எடுத்த முயற்சி என்றே கருதப்படுகிறது. உதாரணமாக 2007/2008ல் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தேசிய அபிவி ருத்தி வங்கியில் பணத்தை வைப்புச் செய்திருந்தார்.
வங்கியில் நான்கு பற்று கணக்குகளில் 5,524,875 ரூபா 25 சதத்தையும் வைப்பு செய்திருந்தார். மேலும் 8 கணக்குகளில் 5,524,875 ரூபா 25 சதத்தையும் கடன் கணக்கில் வைத்திருந்தார். 2008ம் ஆண்டு பெப்ரவரி 8ம் திகதியன்று 674,323ரூபா 52சதம் இந்த கணக்கில் இருந்தது. அன்றைய தினம் இந்த முழுத் தொகையும் வங்கியில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வங்கிக் கணக்கு பூஜ்ஜிய நிலைக்கு குறைந்தது.
இந்தக் கணக்குகளை கையாண்ட முறையை அவதானிக்கும் போது அது வழமையாக நடைபெறும் செயற்பாடு என்பது தெரியவந்தது. இவ்விதம் செயற்படுவதன் மூலமும் ஒரே நிலையான கபடத்தனமாக கணக்குகளை கையாள்வதும் ஒரு திட்டமிட்ட முறையில் முழு சொத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாக வைத்திருப்பதை ஊர்ஜிதம் செய்கின்றதென்று வங்கி மற்றும் நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment