Thursday, December 27, 2012

சம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல் குறைஸ் முன்பள்ளி சிரார்களின் வருடாந்த பரிசளிப்பு விழா..


சம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல் குறைஸ் முன்பள்ளி சிரார்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் கலைநிகழ்ச்சிகளும் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஏ.அமீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும் , சமாதான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் ,கல்முனை போட்டோ டிஜிடல் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எம்.ஜெஸ்மின் , கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலய அதிபர் எம்.ஐ.மீராமுகைதீன் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரேத்தியேக செயலாளர் எம்.எம்.ஜவ்பர் , கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் வை.பி. சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது சிரார்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் முன்பள்ளி சிரார்களுக்கு பாடசாலை உபகரணங்களும் , சான்றிதழ்களும் , பாடசாலை பைகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.









No comments:

Post a Comment