Saturday, December 22, 2012

ஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடமாற்றம்.


கல்முனை பொலிஸ் நிலைய வீதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த ஹட்டன் நஷனல் வங்கியின் கல்முனை கிளை  கல்முனை - மட்டக்களப்புவீதியிலுள்ள புதிய சொந்த கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யும் நிகழ்வு இன்று மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.
வங்கி கிளை முகாமையாளர் எஸ்.எம்.எம்.பளீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வங்கியின் பிரதி நிறைவேற்று அதிகாரி  ஜொனதன் அலஸ் பிரதம அதிதியாகவும்
கல்முனை மாநகர மேயர்  கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் , வங்கியின் பிரதி பொது முகாமையாளர் பியால் ஹேனநாயக , கிழக்கு பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் எச்.ஏ.ஆறுமுகம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்   பிரதேச செயலாளர்கள் , பாடசாலை அதிபர்கள் , வர்த்தக பிரமுகர்கள் உட்பட  மார்க்க பெரியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளை கல்முனை கார்மல் பாத்திமாக்  கல்லூரி மாணவர்கள் பாடல் மற்றும் நடனங்களுடன் வரவேற்றனர்.
திறப்பு விழா ஞாபகார்த்தமாக கல்முனை பிரதேச பாடசாலைகளில் கல்விபயிலும்  மாற்று ஆற்றல் படைத்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை வைப்பிலும் இட்டனர்.











No comments:

Post a Comment