Saturday, December 22, 2012

பாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைக்கும் விழிப்புணர்வு ஊர்வலம்.


கல்முனை கல்வி வலய முறைசாரா கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைக்கும் விழிப்புணர்வு ஊர்வலமொன்று மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் இடம்பெற்றது.
மாளிகை்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீரின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் காரைதீவு  கோட்ட கல்வி பணிப்பாளர் பரதன் கந்தசாமி , முறைசாரா கல்விக்கான இணைப்பாளர் சிறிநிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகளும்  இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
 பாடசாலைக்கு மாணவர்கள் வரும் தரும் பிரதேசங்களை உள்ளடக்கியதாக பெற்றோர்களுக்கும்  இடைவிலகிய மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இந்த விழிப்புணர்வு ஊர்வலம் அமைந்திருந்தது.





No comments:

Post a Comment