Sunday, December 9, 2012

சாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு நிகழ்வு .


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு நிகழ்வு இன்று சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இளைஞர் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாமஸ்ரீ எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் , அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் அல்ஹாஜ் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி , தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் கே.எம்.  திஸாநாயக , கிழக்கு மாகாண முதலமைச்சரின் அம்பாறை மாவட்ட  இணைப்பாளர் எம்.எம்.எம்.றபீக், சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன், சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி கணக்காளர் பீ. ஏ.எல்.கே.எஸ். பாலசூரிய ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , விரிவுரையாளர்களான ஏ.ஆர்.சண்முகநாதன், எம்.பி.நௌஸாத், எம்.ஐ.எம்.பாயிஸ் , பீ. தியாகராஜா, திருமதி சிராஜுன் முனீரா , பீ. பஹட்சமான் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.








No comments:

Post a Comment