Sunday, December 9, 2012

”விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா”


அட்டாளைச்சேனை பிரதேச சபை, நூலக அபிவிருத்திக் குழுவின் ஒத்துழைப்புடன் தேசிய வாசிப்பு மாதம் தழுவிய கலை, கலாசார, பண்பாட்டு, பாரம்பரிய  ”விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா” எனும் தலைப்பிலான நிகழ்வொன்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேசசபை தவிசாளர் எம்.ஏ. ஹன்சீலின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு வருகை தந்தவர்களை பாடசாலை மாணவ பாண்ட வாத்திய குழுவினரும் மருதூர் தக்வா பொல்லாடி குழுவிரும்  வரவேற்றனர்.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு, மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ்  என்.எம்.அப்துல்லாஹ் கலந்து கொண்டார்.

மக்கள் மத்தியிலிருந்து தூர்ந்து செல்லும் பாரம்பரியக் கலைகளான கழிகம்பாட்டம்(பொல்லடி) ,வில்லுப்பாட்டு, நாட்டார் பாடல், கட்டு(ப்)பாட்டு, ரபான் அடித்தல், வாள்வீச்சு, நூறு மஸலா, தீப்பந்தம் வீசுதல், நாடக கலை, சீனடி, சிலம்படி , பட்டி மன்றம் போன்றவற்றுக்கு உயிரூட்டு முகமாகவும், ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நிகழ்வுகள் மர்ஹும் எம்.ஏ. நூஹு லெவ்வை அரங்கில் இடம்பெற்றன.

இறுதி நிகழ்வில் பங்கு பற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள்,  பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் உலமாக்கள் ஊர்பிரமுகர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்







No comments:

Post a Comment