Wednesday, December 26, 2012

வீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தமான கலந்துரையாடலும் விழிப்புணர்வு கருத்தரங்கும்


கல்முனை வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீதிப்போக்குவரத்து , வீதி வாகன தரிப்பிடம் , கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை ,வீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தமான கலந்துரையாடலும் விழிப்புணர்வு கருத்தரங்கும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி , கல்முனை பிரதேச முப்படை பொறுப்பதிகாரிகள், கல்முனை , சவளக்கடை , சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , பாடசாலை அதிபர்கள் , வர்த்தக சங்க தலைவர்கள் , திணைக்கள தலைவர்கள் , அம்பாறை மாவட்ட வானக பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் , வைத்திய அதிகாரிகள்,  வாகன உரிமையாளர் சங்கத் தலைவர்கள் , சமயத்தலைவர்கள் போன்ற பல்துறைகளையும் சாந்தோர் பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதி அகலம் குறைந்ததாக காணப்படுவதனால் வர்த்தக நிலையம் , அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் , பாடசாலைகள் , சந்தைகள் மற்றும் வங்கிகளுக்கு முன்னால்  வீதியின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டு வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும் , பிரதான வீதிகளில் உள்ள கடைகளில் பொருட்கள் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் போன்ற நிகழ்வுகளின் போது கடை உரிமையாளர்கள் அனுபவிக்கும் இன்னல்கள்,  , நடைபாதை வியாபாரத்தால் பாதசாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை , கல்முனை மாநகர சபையினால் தினசரி குப்பை கூளங்களை அகற்றுவதில் உள்ள சிக்கல் நிலை , பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் ஏனைய அரச தனியார் உத்தியோஸ்தர்கள் உரிய நேரத்திற்கு தமது அலுவலகங்களுக்கும் பாடசாலைக்கும் செல்ல முடியாதுள்ளமை சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டதோடு இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் இருந்து எவ்வாறு பொதுமக்களையும் ஏனையோரையும் விடுவிக்க முடியுமெனவும் கலந்தோலோசிக்கப்பட்டது.




No comments:

Post a Comment