Saturday, December 22, 2012

கல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோய்.


கல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊர்வலமொன்று இன்று இடம்பெற்றது.
  கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்களும் கொழும்பு வெஸ்லி கல்லூரி மாணவர்களும் சிறிலங்கா யுனைட்ஸ் அமைப்புடன் இணைந்து இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்.
அண்மைக்காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் சில டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு கல்முனை மாநகரசபை , சாய்ந்தமருது , காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் , கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை ,பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் புரணமான ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர்.



No comments:

Post a Comment