சீடோ உடன்படிக்கை மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325ஆவது பிரேரணை ஆகியவற்றை அறிவூட்டி அதனை இலங்கையில் பிரயோகித்தல் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு ஒன்றை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, பெண்களினதும், அபிவிருத்திக்கானதுமான மன்றத்தின் அனுசரணையுடன் நேற்றும்,இன்றும் கல்முனை கிரிஸ்டா இல்ல மண்டபத்தில் நடாத்தியது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு மாகான சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் வளவாளர்களாக சட்டத்தரணியான அப்துல் மர்சூக் மற்றும் அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் ஆகியோர்; கலந்துகொண்டனர்.
--(எஸ்.லெவ் வை)
No comments:
Post a Comment