Monday, December 3, 2012

புல்மோட்டை கடலில் 37 இந்திய மீனவர்கள் கைது * அத்துமீறிய குற்றச்சாட்டு

5 படகுகளும் தடுத்துவைப்பு
இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 இந்திய மீனவர்களை இலங்கை கடற் படையினர் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
திருகோணமலை, புல்மோட்டை கடலில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய ஐந்து இந்திய மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.
கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கிழக்கு கடற்படைத் தலைமையக ரோந்து படகுகள் புல்மோட்டை கடலில் சட்ட விரோதமாக இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து ஐந்து மீன்பிடி படகுகளையும் கைப்பற்றிய கடற்படையினர் இதிலிருந்து 37 இந்தியர்களையும் கைது செய்துள்ளனர்.
நேற்றுக் காலை திருகோணமலை துறைமுகத்திற்கு கடற் படையினரால் அழைத்து வரப்பட்ட இந்திய மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக் கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment