Monday, December 3, 2012

2013: கல்வியாண்டு: இலவச புத்தகங்கள், சீருடை வழங்கும் தேசிய நிகழ்வு இன்று

பாடசாலை மாணவர்களுக்கு 2013 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை இலவச புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கி வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று பொலன் னறுவை ராஜகீய வித்தியால யத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடை பெறும். சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட, மாகாண அமைச்சர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வுள்ளனர்.
இதேவேளை, நாடு முழுவதுமுள்ள அனைத்து கல்வி வலயங்களுக்கும் பாட சாலை தேசிய புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்ப தாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

No comments:

Post a Comment