Saturday, December 22, 2012

கல்முனை சுறா பவுண்டேசனின் அனுசரனையில் கல்முனை இஸ்லாமாபாத் யங் மௌண்ட் விளையாட்டுக் கழகம் நடாத்திய 2012ஆம் ஆண்டுக்கான வருடாந்த மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்யில் கல்முனை போவட் அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

 இஸ்லாமாபாத் மைதானத்தில்அண்மையில் இடம் பெற்ற 7 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டியில் மாவடிப்பள்ளி அணி. நிந்தவுர் அணி. கல்முனை யங் மெளண்ட் காரைதீவு விளையாட்டுக்கழகம் ,கல்முனை போவட் விளையாட்டுக்கழகம் .எப்.எஸ்.சி  ஆகிய அணிகள் பங்கேற்றன.
இதில் இறுதியாட்டத்திற்கு கல்முனை போவட் அணியும் . எப்.எஸ்.சி. அணியும் தெரிவு செய்யப்பட்டதுடன், எப்.எஸ்.சி. அணியை எதிர்த்தாடிய போவட் அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டி 2012ஆம் ஆண்டு சம்பியனாக தெரிவாகியது.

 இந்நிகழ்வில் கல்முனை முஸ்லிம் பிரிவு மற்றும் கல்முனை நகர கிராம உத்தியோகத்தா் எஸ்.கே.றாஸிக் தம்பி பிரதம அதிதியாகவும் சமூக சேவையாளா்களான எஸ்.எம்.அபுபக்கா்.ஏ.நிஸார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும். சுறா பவுண்டேசனின் பணிப்பாளா் ஏ.எஸ்.ஜவ்பா் மற்றும் திட்ட இணைப்பாளா் எ.பி.எம்.றினோஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment