Wednesday, November 21, 2012

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல் மனார் வித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆசிரியர்களின் பிரதிநிதிகளும் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளும் இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

பழைய மாணவர் சங்க செயலாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இப்பாடசாலைக்கு விஜயம் செய்த குழுவினர் பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுற்றாடல் திட்டம் , கல்வி நடவடிக்கைகள் , கற்பித்தல் செயற்பாடுகள் , காட்சிப்படுத்தல் செயற்பாடுகள் , மாணவரகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வசதிகள் , வாசிகசாலை , விஞ்ஞான ஆய்வு கூடங்கள் , மாணவர்களின் செயற்பாடுகள் , ஆவணப்படுத்தல் , போசணசாலை என்பவற்றை பார்வையிட்டதுடன் அல் மனார் வித்தியாலய அதிபர் ஐ. நஸார் மற்றும் முஸ்லிம் மகளிர் வித்தியாலய அதிபர் ரீ.எம்.தௌபீக் ஆகியோருடன் கலந்துரையாடல்களையும் நடாத்தினார்கள்.

இவ்விரு பாடசாலைகளினதும்  நடவடிக்கைகளின் போது பாடசாலைகளுக்கிடையில் வளங்களை பரிமாறிக் கொள்ளுதல் சம்பந்தமாகவும் இவ்விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment