Saturday, November 17, 2012

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஸக்காத் நிதிய


சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஸக்காத் நிதியம் ஒழுங்கு செய்திருந்த  ஸக்காத் (ஏழை வரி) விநியோகம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளரும், சாய்ந்தமருது -மாளிகைக்காடு பைத்துஸ் - ஸக்காத் நிதியத்தின்தலைவருமான, ஓய்வுபெற்ற அதிபர் அல் - ஹாஜ்.வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஸக்காத் குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட
தொழில் முயற்சியாளர்கள், கடனாளிகள், நோயாளிகள்,அனாதைப் பிள்ளைகள், புதிதாக இஸ்லாத்தில்இணைந்துகொண்டோர்,  விதவைகள் போன்றோருக்காக
ரூ. 2,118,733.00 பணமாகவும், நெல்லாக 167 மூடைகளும்பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவ்வைபவத்தில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்றஉறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத்தலைவருமான கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசியஅமைப்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமானகௌரவ ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் கௌரவகலாநிதி சிராஸ் மீராசாஹிப், உட்பட உலமாக்கள்,கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், வர்த்தகப்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்துநிர்மாணிக்கப்படவுள்ள ஜும்மா பள்ளிவாசலின் பின்புறமதிலுக்கான அடிக்கல்லும் நடப்பட்டது.











No comments:

Post a Comment