Saturday, November 17, 2012

நிந்தவுர் ஹிதாயத்துல்லாஹ் மீர்சா எழுதிய ” நெறிகள் ஆயிரம் படி” நூல் வெளியீட்டு விழா


நிந்தவுர் ஹிதாயத்துல்லாஹ் மீர்சா  எழுதிய ” நெறிகள் ஆயிரம் படி” நூல் வெளியீட்டு விழா அண்மையில்  கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கூட்ட மண்டபத்தில் ஓய்வு நிலை , கலாசாரப் பணிப்பாளர் அல்ஹாஜ் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை இரசிகர் மன்றம் ஒழுங்கு செய்திருந்த மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 வரவேற்புரையினை கலாபுசணம் யு.எல்.ஆதம்பாவாவும் , நூல் அறிமுகத்தினை தீரன் ஆர்.எம்.நௌஸாத்தும், நூல் நயத்தலை தேசமான்ய எஸ்.எல்.மன்சூரும் , நூல் விமர்சனத்தை கவிஞர் பாலமுனை பாறூக்கும் , கவி வாழ்த்தினை கவிதாயினி கலைமகள் ஹிதாயா றிஸ்வியும்  நிகழ்த்தினார்கள்.






No comments:

Post a Comment