Sunday, November 11, 2012

கல்முனைக்குடிப் பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி - மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு.


கல்முனைக்குடிப் பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி தொடா்பாக அப்பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு அண்மையில் கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

  கிழக்குமாகாண சபை உறுப்பினா் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர்
ஏ.எம்.றிஸ்வி,   ஜெய்கா திட்ட ஆலோசனைப் பொறியியலாளர் எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல் உட்பட ஊர்ப்பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை கூறினார்கள்.

இத்திட்டத்தின் முதற் கட்டமாக கல்முனைக்குடி கடற்கரைப்பள்ளி வீதி, பள்ளி ஒழுங்கை, நகர மண்டப வீதிகளை முதற்கட்டமாக  புனர் நிர்மாணம் செய்யப்படவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கல்முனைப் பிரதேசத்தின் வீதிகள் புணரமைக்கப்படாமல் உள்ளதாகவும் அவற்றையெல்லாம் புணமைத்துத் தருமாரு மக்கள் கேட்டதற்கு “ நிதிகள் வரும் போது நிச்சயமாக எஞ்சிய வீதிகளையும் கட்டாயம் செப்பனிட்டுத் தருவோம் என அமைச்சா் உறுதியளித்தார்.“





No comments:

Post a Comment