Sunday, November 11, 2012

” வளமான மண் வளமான நாடு ”


விவசாய திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் நிலைபேறான நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் சேதனப்பசளை மற்றும் பிரயோசனப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டெரு பிரயோக வயல் விழா இன்று காரைதீவு கமநலசேவை மத்திய நிலைய பிரதேசத்தை சேர்ந்த வளைந்தவட்டை கிழக்கு வயல் பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.
காரைதீவு விவசாய போதனாசிரியர் எஸ். தவநேசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயராஜன் பிரதம அதிதியாகவும் சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் பீ.கே.பி. முத்துக்குமார , அட்டாளைச்சேனை வலய உதவி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் ,இத்தாலிய தன்னார்வு ஐ.ஸி.ஈ.ஐ. ஓவசீஸ் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எச்.எம்.எம்.டில்சாத் , சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் , நிந்தவுர் விவசாய போதனாசிரியர் எம்.வை.எம்.நியாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மஹிந்த சிந்தையின் அடிப்படையில் இலங்கையில் நஞ்சற்ற உணவு உற்பத்தியினை ஏற்படுத்தும் வகையில் வயல் நிலங்களுக்கு இரசாயன உரத்தினை பயன்படுத்துவதனை தவிர்த்து விவசாயிகள் மத்தியில் சேதன பசளை பாவனையை ஊக்குவிக்கும் வகையில் ” வளமான மண் வளமான நாடு ” திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றது.











No comments:

Post a Comment