Wednesday, November 21, 2012

கல்வியே முதன்மை எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு மதிப்பளித்தல் நிகழ்வு.


கல்வியே முதன்மை எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு மதிப்பளித்தல் நிகழ்வு இன்று கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்றது.
2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நிகழ்வு நாடு தளுவிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மஹிந்த சிந்தனை தொலை நோக்கின் பிரகாரம் அறிவை கேந்திரமாகக் கொண்ட அபிவிருத்தி உபாய முறைகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமுகமாக அதிமேதகு ஜனாதிபதியின் பதவியேற்பினை நினைவு கூறும் வகையில் கல்வியமைச்சு மாணவர்களுக்கு இச் சான்றிதழ்களை வழங்கியிருந்தது.








No comments:

Post a Comment