Saturday, November 17, 2012

” இஸ்லாமிய சமூக நீதியையும் மற்றும் பால்நிலை சமத்துவத்தையும் மேம்படுத்தல் ”


முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் தயாரிக்கப்பட்ட ” இஸ்லாமிய சமூக நீதியையும் மற்றும் பால்நிலை சமத்துவத்தையும் மேம்படுத்தல் ” எனும் நூல் வெளியீட்டு அண்மையில்  சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் முன்னணியின் இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது இப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்ளிட்ட முன்னணியின் திட்ட உத்தியோஸ்தர்களான லைலா உடையார் , நதீரா சாலிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நூலினை அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான தலைவர் எம்.ஐ.ஜவ்பர் , விரிவுரையாளர்களான ஏ.எல்.நாசிர்கனி மௌலவி , எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா , இஸட். தஸ்லிம் மற்றும் கல்முனை கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் இஸட். ஏ.நதீர் மௌலவி ஆகியோர் தொகுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.









No comments:

Post a Comment