Saturday, November 17, 2012

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் “ நட்புறவு ரீதியான உதவிகளை வழங்கல் “


தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் “ நட்புறவு ரீதியான உதவிகளை வழங்கல்  “ எனும் தொனிப் பொருளில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 100 வசதி குறைந்த பாடசாலைகளை கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள தேசிய பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தினால் தேசிய பாடசாலைகள்  கற்றல் கற்பித்தல், ஆசிரியா்களின் வாய்மை விருத்தி மற்றும் முடிந்தளவு பௌதிக வளங்களை வழங்கல்  போன்ற மூன்று வகையான உதவிகளை வழங்கவுள்ளன.

இதற்கமைய இன்று கல்முனை கிறீன் பீல்ட் றோயல் வித்தியாலயத்தை பொறுப்பேற்ற புத்தளம் ஸாஹிறா தேசிய பாடசாலையினதும்  சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தை பொறுப்பேற்ற மாத்தளை ஆமினா தேசிய பாடசாலையினதும்  அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளும் கல்முனைப் பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து உரிய பாடசாலைகளை  பார்வையிட்டு அப்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாடி தேவைகளைக் கேட்டறிந்தனா்.

இந்நிகழ்வுகளில் கல்முனை கல்வி வலயத்தின் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.றஹிம் போன்றவா்களும் கலந்து கொண்டனா்.









No comments:

Post a Comment