Thursday, November 22, 2012

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் விடுத்த வேண்டுகோளை அடுத்து மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் செனட்டர் செய்யது இப்றாஹிம் பின் காதர் சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலுக்கு ஜனாசாக்களை ஏற்றும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியினை வழங்க உறுதியளித்துள்ளார்.


கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் விடுத்த வேண்டுகோளை அடுத்து மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் செனட்டர் செய்யது இப்றாஹிம் பின் காதர் சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலுக்கு ஜனாசாக்களை ஏற்றும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியினை வழங்க உறுதியளித்துள்ளார்.
சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை அம்பாறை மாவட்ட உலமா சபை தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி தலைமையில் புதன்கிழமை ஒழுங்கு செய்திருந்த விசேட வைபமொன்றில் கலந்து கொண்ட மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் தூது குழுவிற்கு தலைமை தாங்கி இலங்கைக்கு வருகை தந்த மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் செனட்டர் செய்யது இப்றாஹிம் பின் காதர் சாய்ந்தமருதில் வைத்து இவ்வாறு உறுதியளித்தார்.
அண்மையில் சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற ஸக்காத் நிதியம் ஒழுங்கு செய்திருந்த ஸக்காத் வழங்கும் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலிடம் சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸாக்களை கொண்டு செல்வதற்கு வாகனம் ஒன்று இல்லாமையினால் ஜனாசாக்களை குறித்த நேரத்திற்கு அடக்கம் செய்ய முடியாத நிலையொன்று தோன்றியுள்ளதாக தெரிவித்து வாகனம் ஒன்றை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாகவே இந்த வாகனம் வழங்கப்படவுள்ளது.
தூதுக்குழுவில் மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் அமீர் ஹம்ஜன் பின் அப்துல் ரஜய் , கொள்கைபரப்புச் செயலாளர் அன்வர் சதாத் பின் முஸ்தபா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தூதுக்குழுவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதுடன் சாய்ந்தமருது வரலாறு சம்பந்தமான நூலும் வழங்கப்பட்டது.





No comments:

Post a Comment