Wednesday, November 21, 2012

கல்முனை வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய வலயத்திற்குட்பட்ட பாடசாலை குருளைச் சாரணர் ஆசிரியர்களுக்கான கலைக்கூறு பயிற்சிப் பாசறை .


கல்முனை வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய வலயத்திற்குட்பட்ட பாடசாலை குருளைச் சாரணர் ஆசிரியர்களுக்கான கலைக்கூறு பயிற்சிப் பாசறை நேற்றும் இன்றும் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் கல்முனை வலய உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஏ. சத்தார் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட 26 பாடசாலைகளைச் சேர்ந்த குருளைச் சாரணர் ஆசிரியர்கள் கலந்து கொண்ட மேற்படி பயிற்சி பாசறையில் வளவாளர்களாக குருளைச் சாரணர் உதவி மாவட்ட சாரண ஆணையாளர் எம்.எச்.எம்.மன்சூர் , பயிற்சித் தலைவர் ரீ. தர்மலிங்கம் ஐயா , உதவி மாவட்ட பயிற்சி சாரண ஆணையாளர் கே.எம். தமீம் , உதவி பயிற்சி தலைவர் கே. ராஜலிங்கம் , மாவட்ட குருளைச்சாரண பயிற்சி தலைவி திருமதி மசூரா ஸுஹுர்தீன் , குருளை சாரண தலைவி செல்வி ஜீ. சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.













No comments:

Post a Comment