Wednesday, November 21, 2012

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு பொறுப்பாகவுள்ள சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்களுக்கான சுற்றாடல் மிளாய்வு.


அம்பாறை மாவட்டத்திலுள்ள  பாடசாலைகளுக்கு  பொறுப்பாகவுள்ள சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்களுக்கான சுற்றாடல் மிளாய்வு மற்றும் 2013 ஆம் ஆண்டு பாடசாலைகளில் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள சுற்றாடல் செயற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று     ( 19.11.2012 அம்பாறை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிராந்திய காரியாலயத்தில் கிழக்கு மாகாண பிரதி சுற்றாடல் பணிப்பாளர் எம்.ஏ.ஸி. நஜீம் தலைமையில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று , பொத்துவில் , திருக்கோயில் , கல்முனை , சம்மாந்துறை அம்பாறை , மாகாஓயா , பதியத்தலாவ , தெஹியத்தக்கண்டிய போன்ற கல்வி வலயங்களைச் சேர்ந்த சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்கள் , உதவி சுற்றாடல் ஆணையாளர்கள் , பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சுற்றாடல் மேம்பாட்டு உத்தியோஸ்தர்கள் , மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோஸ்தர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
அம்பாறை பிராந்திய சுற்றாடல் இணைப்பாளர் எம்.புஸ்பகுமார , கல்முனை கல்வி வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எம்.ரீ. நௌபல் அலி மற்றும் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோஸ்தர் எஸ். உதயராஜன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment