Tuesday, November 20, 2012

கூட்டெரு பிரயோக வயல் விழா.


சாய்ந்தமருது – தெற்கு வீட்டுத் தோட்ட அமைப்பின் சேதனப்பசளை உற்பத்தி மற்றும் பிரயோகப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டெரு பிரயோக வயல் விழா இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
விவசாய திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் , விவசாய திணைக்கள பிரதி விவசாய பணிப்பாளர் எம்.அருணதிலக , தலைமையக உதவி விவசாய பணிப்பாளர் எச்.விக்ரமரெட்ன , அட்டாளைச்சேனை உதவி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் , சாய்ந்தமருது உதவி விவசாய பணிப்பாளர் ஏ.எல்.எம்.பரீட் , விவசாய போதனாசிரியர்களான எம்.வை.எம்.நியாஸ் ( நிந்தவுர் ) , எஸ். தவநேசன் ( காரைதீவு) , எஸ்.எச்.ஏ.நிஹார் ( பாலமுனை) , அப்துல் மஜீட் ( சம்மாந்துறை) , எம். செயினுலாப்தீன் ( மல்வத்த ) , விஜயராகவன் ( இறக்காமம் ) , சாய்ந்தமருது பிரதேச கிராம சேவை உத்தியோஸ்தர்கள் , பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் , பிரதேச விவசாயிகள் , சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் , வீட்டுத் தோட்ட முயற்சியாளர்கள் , விதாதா வளநிலைய உத்தியோஸ்தர்கள் மற்றும் விவசாய திணைக்கள உத்தியோஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வீட்டு தோட்ட முயற்சியாளர்களுக்கு சேதனைப்பசளை தயாரிப்பு சம்பந்தமாக செயன்முறை விளக்கமளிக்கப்பட்டதுடன் தயாரிக்கப்பட்ட சேதனப்பசளை விற்பனையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.






No comments:

Post a Comment