Saturday, November 17, 2012

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தினம்.


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தினம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

1995,ஒக்டோபர் மாதம் 23ம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் முயற்சியினால் அன்றய ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் ஆட்சிக்காலத்தில் இப் பல்கலைக்கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது வருடாந்தம் இப்பல்கலைக்கழகத்தில் ஒக்டோபர் மாதம் 23ம் திகதி கொண்டாடப்படுவது வழமையாகும்.

  பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மரக் கன்றுகளும் நடப்பட்டதுடன் விஷேட துவாப்பிரார்த்தனையும் இடம்பெற்றது.  

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில் கலந்து கொண்டதோடு பிரதம பேச்சாளராக மொழித்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.





No comments:

Post a Comment