கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நாற்பெரும் விழாக்கள் இன்று இடம்பெற்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 வது பிறந்த தினத்தையொட்டி நாடு தழுவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ” தேசத்திற்கு நிழல்” திட்டத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தினுள் நடப்பட்டது.
கல்லூரியின் ஸ்தாபகர் தினத்தையொட்டி முன்னாள் ஆசிரியரும் தொலைக்கல்வி இணைப்பாளருமான எம்.எம்.ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்லூரியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் பற்றியும் கல்லூரியின் தோற்றம் பற்றியும் உரையாற்றினார்.
இஸ்லாமிய புதுவருடத்தினையொட்டி மாணவர்களுக்கு மார்க்க சொற்பொழிவுகள் இடம்பெற்றன.
கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் உதவி அதிபர்கள் , பகுதித்தலைவர்கள் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் றிஷாத் செரிப் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment