Sunday, November 11, 2012

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த ” வர்த்தக சந்தை ” இன்று ஆரம்பமானது.


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் வர்த்தகத்தை ஒரு பாடமாக கற்கும் தரம் 6 முதல் க.பொ.த. உயர்தர வகுப்பு வரையிலான மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த ” வர்த்தக சந்தை ” இன்று ஆரம்பமானது.
கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ. தௌபீக் பிரதம அதிதியாகவும் , பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவிகள் இவ்வர்த்தக கண்காட்சியினை பார்வையிடுவதற்காக திரண்டிருந்தனர்.
வர்த்தக  சந்தை  19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30  மணியுடன் நிறைவடையவுள்ளது.












No comments:

Post a Comment