Friday, November 2, 2012

நடமாடும் சேவை


தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ்கல்முனை, கல்முனை தமிழ் பிரதேச செயலகம்களை உள்ளடக்கியதாக ஏட்பாடு செய்யப்பட நடமாடும் சேவை நிகழ்வு இன்று கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில்  இடம்பெருகின்றது.

இதில் ஜனாதிபதி செயலகம், காணித்துறை, ஆட்பதிவு, கடவுச்சீட்டு, மாகாண கல்வி பணிப்பாளர் திணைக்களம், பொலிஸ் பிரிவு என்பவை அடங்கலாக 31 திணைக்களங்களின் சேவைகளை மக்கள் பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமைல் இடம்பெற்ற இன் நிகழ்வில்,கல்முனை தமிழ் பிரிவு பிரதேச  செயலாளர்கே.லவநாதன், அம்பாறை மாவட்ட போக்குவரத்து ஆணையாளர் எ .எல்.எம்.பாரூக், சமுர்த்தி மாவட்ட இணைப்பள்ளர் ஐ. அலியார் உட்பட மத பெரியார்கள், திணைக்களம்களின் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





-(எஸ்.லெவ்வை_கல்முனை )

No comments:

Post a Comment