Wednesday, November 21, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 வது பிறந்த தினத்தையொட்டி விஷேட துவாப்பிரார்த்தனை சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 வது பிறந்த தினத்தையொட்டியும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவடைவதனையிட்டும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஒழுங்கு செய்திருந்த விஷேட துவாப்பிரார்த்தனை சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பிரதேச  செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அல் ஹாபில் எஸ். அப்துல் லத்தீப் துவாப்பிரார்த்தனையினை நடாத்தினார்.
சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் , சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் பலர் இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment