Saturday, November 24, 2012

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 5 வது வருடாந்தப் பொதுக் கூட்டம் அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.


அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 5 வது வருடாந்தப் பொதுக் கூட்டம்  அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

 இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம்.பைஸர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்   பிரதம அதிதியாக அஞ்சல், மா அதிபர் டீ.எல்.பி. றோஹன அபயரத்ன கலந்து கொண்டதுடன் அதிதிகளாக மட்டக்களப்பு பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பீ. புவனசுந்தரம், மாகாண நுண்ணாய்வுப் பரிசோதகர் எம்.இஸட்.எம். பாறூக், பிரதேச நுண்ணாய்வுப் பரிசோதகர் எம்.தம்பிஐயா உட்பட  அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். உமேஷ்காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 அஞ்சல் மா அதிபருக்கு நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்படதோடு சங்கத்தின அ.தி.உ.ச.செய்தி பத்திரிகையும் வெளியிடப்பட்டு  அங்கத்தவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கும் சங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட குடை ஒன்று வழங்கப்பட்டதுடன்   2012/2013 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.







No comments:

Post a Comment