Thursday, November 15, 2012

2012 ஆம் ஆண்டுக்கான மாணவத்தலைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு.



கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஒழுக்காற்று சபை ஒழுங்கு செய்திருந்த 2012 ஆம் ஆண்டுக்கான மாணவத்தலைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று இரவு கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் ஒழுக்காற்று சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.நுபைஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாகவும் , பழைய மாணவர் சங்க செயலாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் , கல்லூரியின் உதவி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட் , எம்.ஐ.ஜவாஹர் இப்றாஹிம் , எம்.ஐ.எம்.அஸ்மி , ஒழுக்காற்று சபை பிரதி தவிசாளர் யு.எல்.எம்.இப்றாஹிம் , பகுதித்தலைவர் எம்.எம்.ஏ. சமட் , சிரேஷ்ட ஆசிரியர்களான ஏ.எம்.சித்தீக் , அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.அலி , எம்.ஐ.எம்.அஸ்ஹர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவத் தலைவருக்கான விருது எம்.எம்.தானிசுக்கு வழங்கப்பட்டது.








No comments:

Post a Comment