Saturday, November 17, 2012

காரைதீவில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனன தினவிழா.


காரைதீவில்  வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனன தினவிழாவையொட்டி  மாபெரும் ரத பவனியும் இந்து எழுச்சி ஊர்வலமும் கோலாகமாக உணர்ச்சி பூர்வமாக நடைபெற்றது.

காரைதீவு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ரதபவனி ஸ்ரீ சாரதா சிறுமியரில்லத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு இ.கி.மிசன் தலைவர் சுவாமி கபாலீஸானந்தா ஜீ சுவாமி யோகீரானந்தா ஜீ ஆகியோர் ஆன்மீக அதிதிகளாக கலந்து கொண்டு சமய கிரியைகளில் ஈடுபட்டனர்.

சிக்காக்கோவில் உரையாற்றிவிட்டு இந்தியா வந்த சுவாமிக்கு எவ்வாறு இராமநாதபுர மன்னன் தானே வண்டியிழுத்து வரவேற்பளித்தானோ அவ்வாறு இங்கும் நடாத்தப்பட்டது.

இவ் ஊர்வலத்தில் ஆலயங்கள் பாடசாலைகள் ஊர்ப்பொதுநல அமைப்புகள் சார்பாக அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




No comments:

Post a Comment