Saturday, November 24, 2012

“கல்முனை மாநகரத்தை சுத்தம் செய்து அழகுபடுத்துவோம்“


67 ஆவது ஐ.நா. தினத்தை முன்னிட்டு “கல்முனை மாநகரத்தை சுத்தம் செய்து அழகுபடுத்துவோம்“ எனும் தொனிப்பொருளில்   நகரத்திலுள்ள குப்பை கூழங்களை அகற்றி சுத்திகரித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக சுத்திகரிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் கல்முனை மாநகர மேயா் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினா்கள், ஊழியா்கள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட யுனொப்ஸ் நிறுவனத்தின் உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

 இந்நிகழ்வின்  கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் 6 கழிவகற்றும் தொட்டிகளும், தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் 2 கழிவகற்றும் தொட்டிகளும் இன்று நிறுவப்பட்டன.
இந்து சமையத்தின் கல்விக்கான தெய்வமாகப் மதிக்கப்படும் சரஸ்வதி தேவியை போற்றும்முகமாக ஆண்டு தோறும் வாணி விழா .


இந்து சமையத்தின் கல்விக்கான தெய்வமாகப் மதிக்கப்படும் சரஸ்வதி தேவியை போற்றும்முகமாக ஆண்டு தோறும் வாணி விழா கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.

 இதற்கமைய கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையி அண்மையில்  பாடசாலையின் அதிபர் வ. பிரபாகரன் தலைமையில் வாணி விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலை நிகழ்ச்சிகளும் பரிசு வழங்கும் நிகழ்வுகளும்   இடம்பெற்றன.


அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 5 வது வருடாந்தப் பொதுக் கூட்டம் அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.


அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 5 வது வருடாந்தப் பொதுக் கூட்டம்  அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

 இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம்.பைஸர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்   பிரதம அதிதியாக அஞ்சல், மா அதிபர் டீ.எல்.பி. றோஹன அபயரத்ன கலந்து கொண்டதுடன் அதிதிகளாக மட்டக்களப்பு பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பீ. புவனசுந்தரம், மாகாண நுண்ணாய்வுப் பரிசோதகர் எம்.இஸட்.எம். பாறூக், பிரதேச நுண்ணாய்வுப் பரிசோதகர் எம்.தம்பிஐயா உட்பட  அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். உமேஷ்காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 அஞ்சல் மா அதிபருக்கு நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்படதோடு சங்கத்தின அ.தி.உ.ச.செய்தி பத்திரிகையும் வெளியிடப்பட்டு  அங்கத்தவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கும் சங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட குடை ஒன்று வழங்கப்பட்டதுடன்   2012/2013 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.பயன் படுத்தாத சுனாமியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் உடைக்கும் பணிகள் இடம் பெற்று வருகிறது.


கல்முனை மாநர  எல்லைக்குள் 65 மீற்றருக்குட்பட்ட கரையோரப்பிரதேசத்தில் காணப்படும் மக்களின் பாவனைக்கு பயன்படுத்த முடியாத மற்றும் மக்கள் பயன் படுத்தாத சுனாமியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள்  உடைக்கும் பணிகள் இடம் பெற்று வருகிறது.

இச்செயத்திட்டத்தை கல்முனை மாநகர சபையுடன் இணைந்து யுனொப்ஸ் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.


கல்முனை அல் மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்.


 கல்முனை அல் மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் அண்மையில் கல்முனை கடற்கரை பறக்கத் பார்க்கில் இடம்பெற்றது.
 கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பரகத்துல்லாஹ்  விளையாட்டு நிகழ்வுகளை உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
 பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளில் இளைஞர்களும் சிறுவர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
48 வருடங்களின் பின் ஒன்று சேர்ந்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் வகுப்பு தோழர் தோழிகள்.


48 வருடங்களின் பின் ஒன்று சேர்ந்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் வகுப்பு தோழர் தோழிகள்
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 1964 ஆம் ஆண்டில் க. பொ.த. சாதாரண தர வகுப்பில் ஒன்றாக கல்வி கற்று இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் ஒன்றையும் தங்களது வகுப்பில் ஒன்றாக கல்வி பயின்று இலங்கையின் சரித்தரத்திலேயே முதல் முஸ்லிம் மேல்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து தற்போது ஓய்வு பெற்றுள்ள ஏ.எல்.மைமுனா அஹமட் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினையும் கல்முனையில் இன்று ஒழுங்கு செய்திருந்தனர்.
48 வருடங்களின் பின்னர்  கல்முனை இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஐ.எல்.பரீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி சமகால தோழர் தோழிகளான 25 பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வகுப்பில் ஒன்றாகவிருந்து கல்வி கற்ற 15 பேர் இறைவனடி எய்துள்ளனர். அவர்களுக்காக அனைவரும் துவாப்பிரார்த்தனையும் செய்து கொண்டதோடு எதிர்காலத்தில் தமது சமூகத்திற்கும் தாம் கல்வி கற்ற கல்லூரிக்கும் பலவிதமான சேவைகளை செய்வதற்காக திட்டமிட்டுள்ள இக் குழுவினர் தமக்கிடையேயும் உறவுகளை பலப்படுத்த எண்ணியுள்ளனர்.
இக்கல்லூரியின் பழைய மாணவியும் தமது சக வகுப்பு தோழியுமான ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதிக்கு அமைப்பின் பொருளாளரும் கல்முனை றினோ கோல்ட் ஹவுஸ் உரிமையாளருமான அல்ஹாஜ் எம்.ஐ.ஆதம்பாவா , முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஓய்வு பெற்ற பிரதியதிபர் எம்.ஏ.எம்.ஜெமீல் , இஸ்மா பரீட் , எஸ்.உம்மு சல்மா ( ராஹிலா ) , நண்பர் நஜீம் ஆகியோர் வாழ்த்துப்பாக்களையும் கவிதைகளையும் வாசித்ததுடன் மாளிகைக்காடு மஸ்ஜிதுல் சாலிஹீன் பள்ளிவாசல் கதீப் பீ.எம்.மன்சூர் பாடலொன்றை பாடினார்.
ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.மைமுனா அஹமட் பொன்னாடை போர்த்தி , நினைவு சின்னம் மற்றும் வாழ்த்துப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்தோடு நினைவு மலரினையும் வெளியிட்டு வைத்தார்.
 குழுவின் செயலாளரும் சாய்ந்தமருது ஸ்டார் பிரின்டர்ஸ் உரிமையாளருமான எம்.ஐ.ஹதியத்துல்லாஹ்வின் நன்றியறிதலுடன் ஒன்றுகூடல் நிகழ்வு பகற்போசணத்துடன் நிறைவு பெற்றது.


அகில இலங்கை ரீதியில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மூன்றாம் இடம்.


அகில இலங்கை ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 5எஸ் உற்பத்தித்திறன்  போட்டியில் சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மூன்றாம் இடத்தை பெற்றுஉள்ளது;.

உற்பத்தித்திறன் மேன்பாட்டு அமைச்சின் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால்  நடாத்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்களு க்கிடையிலான 5எஸ் உற்பத்தித்திறன்  போட்டியிலே சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீன் கடமையாற்றும்  அலுவலகமானது<  அகில இலங்கை ரீதியில்  மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது; என சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் நியாஸ் எம்.அப்பாஸ் தெ ரிவித்தார்.
==(எஸ்.லெவ்வை) 
Thursday, November 22, 2012

“சித்திரக்கலை துணை நூல்“ எனும் நூலை அக்குரனை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய அதிபர் திருமதி எஸ்.ஆர் செயின் வெளியீட்டு வைத்தார்.


அக்குரனண முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தில் இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதரப்பாரீட்சை எழுதவுள்ள மாணவா்களுக்கு இடம் பெற்ற சித்திரப்பாட கருத்தரங்கில், கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய சித்திரப்பாட ஆசிரியர் எஸ்.எம்.எம்.றம்ஸான் பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.

இதன் போது ஆசிரியர் எஸ்.எம்.எம்.றம்ஸான் தொகுத்து எழுதிய “சித்திரக்கலை துணை நூல்“ எனும் நூலை அக்குரனை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய அதிபர் திருமதி எஸ்.ஆர் செயின் வெளியீட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் உட்பட மாணவா்களும் கலந்து கொண்டனர்.

” உளநலம் உள நோய்கள் ” தொடர்பான மூன்று நாள் மருத்துவ கண்காட்சி அண்மையில் இடம்பெற்றது.


கல்முனை ஆதார வைத்தியசாலையின் உளநலப்பிரிவு ஒழுங்கு செய்திருந்த
  ” உளநலம் உள நோய்கள் ” தொடர்பான மூன்று நாள் மருத்துவ கண்காட்சி அண்மையில் இடம்பெற்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் உளநலப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ரமேஸ் ஜெயகுமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி  நிகழ்விற்கு பிரதம அதிதியாக  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூர் கலந்து கொண்டார்.
கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபிர் , கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் உளநலப்பிரிவு உத்தியோஸ்தர்  கண்காட்சியினையும் மனநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களையும் பார்வையிட்டனர்.


மலேசியாவின் செனட்டருமான செய்யத் இப்ராஹிம் பின் காதர், அக்கட்சியின் செயலாளர்நாயகம் அமீர் ஹம்சா பின் அப்துல் ரஜாக் மற்றும் அன்வர் சதாத் பின் முஸ்தபா உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அவர்களின் அழைப்பின்பேரில் இலங்கை வந்துள்ள மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மலேசியாவின் முதலாவது இந்திய முஸ்லிம் காங்கிரஸின் செனட்டருமான செய்யத் இப்ராஹிம் பின் காதர், அக்கட்சியின் செயலாளர்நாயகம் அமீர் ஹம்சா பின் அப்துல் ரஜாக் மற்றும் அன்வர் சதாத் பின் முஸ்தபா உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் புதன்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களை திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

அதன் பின்னர் கிம்மா உயர்மட்டக் குழுவினர் தங்களது கட்சி சார்பில் இயங்கும் கூட்டுறவு அமைப்பினால் மலேசியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கோழிப் பண்ணை தொடர்பாக ஆராயும் பொருட்டு மாகாணசபையின் கால்நடை அபிவிருத்தி அமைச்சால் திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் கோழிப்பண்ணை ஒன்றுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அப்பண்ணை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண விவசாயத் திணைக்கள, கால்நடை உற்பத்தி, கிராமிய கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களும் கலந்துகொண்டார்.