கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான பாசறையொன்றினை இன்று ஒழுங்கு செய்திருந்தனர்.
2013 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள ” தேசத்திற்கு மகுடம் ” தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் போது மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படவுள்ள கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை முன்னெடுத்து செல்வதற்கு முன்னோடியாகவே இந்த பாசறை இடம்பெற்றது.
கல்லூரி இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான ஆசிரியர் எம்.எம்.எம்.ஜெலீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரியின் உதவி அதிபர் எம்.எஸ்.முஹமட் , பல்ஊடக தொழில்நுட்ப பொறுப்பாசிரியர் எம்.ஏ.சலாம் , கடல்சார் சுற்றாடல் உத்தியோஸ்தர் கே. சிவகுமார் , கள உத்தியோஸ்தர் எச்.பீ.எல்.எஸ். பண்டார மற்றும் சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் முன்னோடி உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment