Monday, October 8, 2012

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பாண்ட் வாத்தியக்குழுவினருக்கான சீருடைகளை வழங்கும் வைபவம்.


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பாண்ட் வாத்தியக்குழுவினருக்கான சீருடைகளை வழங்கும் வைபவம் இன்று கல்லூரியில் இடம்பெற்றது.
கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. சாதாரணதர வகுப்புகளில் கல்வி பயின்று இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு உயர்பதவிகளை வகித்து கொண்டிருக்கும் ” ஸஹிரியன் 90 ”  அமைப்பு இந்த சீருடைகளை அன்பளிப்பாக வழங்கி இருந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ”” ஸஹிரியன் 90 ”  அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் , மக்கள் வங்கி உத்தியோஸ்தர் எம்.ஆர்.எம்.றியாஸ் மற்றும் வை.பி.ஹக்கீம் ஆகியோர் சீருடையினை கல்லூரி அதிபர் ஏ. ஆதம்பாவாவிடம் கையளித்தனர்.

No comments:

Post a Comment