Wednesday, October 17, 2012

சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் நாற்பெரும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.


சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் நாற்பெரும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும் , சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் சிறப்பு அதிதியாகவும் , அம்பாறை பிராந்திய வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் புரவலர் ஏ.எம்.றிஸ்வி விசேட அதிதியாகவும் , கல்முனை வலய பிரதி கல்விப்பணிப்பாளர்களான எம்.எஸ்.ஏ.ஜலீல் , எம்.சௌதுல் நஜீம் , உடற்கல்வித்துறை உதவிப்பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் , ஓய்வு பெற்ற அதிபர்களான ஐ.எல்.ஏ.மஜீட் மற்றும் ஏ.பீர்முஹம்மட் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் புங்கா , பாடசாலை முகப்பு பாதை என்பன திறந்து வைக்கப்பட்டதோடு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி பாராட்டியும் கௌரவிக்கப்பட்டார்.











No comments:

Post a Comment