Sunday, October 7, 2012

சாய்ந்தமருது ஸீ.ஐ. எம்.எஸ். கெம்பஸ் பட்டப்படிப்பு மற்றும் தொழிற் பயிற்சிகளுக்காக இந்திய மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் புலமைப் பரிசில்களை பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


சாய்ந்தமருது ஸீ.ஐ. எம்.எஸ். கெம்பஸ் பட்டப்படிப்பு மற்றும் தொழிற் பயிற்சிகளுக்காக இந்திய மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் புலமைப் பரிசில்களை பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது ஸீ.ஐ. எம்.எஸ். கெம்பஸ் உயர்கல்வி நிறுவனமானது மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டு, பல உள்நாட்டு வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பட்டப்படிப்பினையும் பல கற்கை நெறிகளையும் தொழில்சார் பயிற்சி நெறிகளையும் நடாத்தி வருகின்றது.

கிழக்கில் தனியார் கல்வி நிறுவனங்களில் தலைசிறந்து விளங்கி வருகின்ற  சாய்ந்தமருது ஸீ.ஐ. எம்.எஸ். கெம்பஸ் எமது பிரதேச மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களை நன்கறிந்து க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத அல்லது பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கும் க.பொ.த  சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்குமான இப்புலமைப் பரிசில்கள் இந்தியாவிலுள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கவுள்ளதாக சாய்ந்தமருது ஸீ.ஐ. எம்.எஸ். கெம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் முஸ்தபா தெரிவித்தார்.

இப்புலமைப்பரிசில் திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எதிர்வரும் 20 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறும் நுழைவுப் பரீட்சையில் பங்குபற்றலாம்  எனவும் அதற்கான மேலதிக தகவல்களை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள தமது நிறுவனத்திலோ அல்லது 0672225600 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment