Sunday, October 7, 2012

கல்முனை எம்காஸ் கல்வியகத்தின் 2 வது ஆண்டு நிறைவு.


கல்முனை எம்காஸ் கல்வியகத்தின் 2 வது ஆண்டு நிறைவும் எஹியாகான் புலமைப்பரிசில் மூலம் கணணி பயிற்சி நெறியினை புர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளர் ஏ.ஸி.எஹியாகான் பிரதம அதிதியாகவும் , அல் பஹ்ரியா மகா வித்தியாலய பிரதி அதிபர் எம்.ஐ.அப்துல் றஸாக் கௌரவ அதிதியாகவும் , சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எம்.உதுமாலெவ்வை , எம்காஸ் நிறுவனத்தின் ஆலோசகர் எம்.எச்.ஏ.கரீம் , சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர்  ஆகியோர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை எம்காஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.முஹம்மட் இர்ஸாத் மற்றும் கற்கை நெறிக்கு பொறுப்பான பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சலீம் ஒழுங்கு செய்திருந்தனர்.
கணணி பயிற்சியினை நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கு அதிதிகள் சான்றிதழ்களை வழங்கியதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.











No comments:

Post a Comment