Friday, October 26, 2012

பேனை மூடிகளால் உருவாக்கப்பட்ட இயங்கக்கூடிய ”ரோபோ ” அமைத்து கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் சாதனை


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாய்ந்தமருதைச் சேரந்த ஜவ்பர் முஹம்மட் பயாஸ் கழிவாக வீசப்படும் பேனை மூடிகளைப் பயன்படுத்தி மின்கலத்தில் இயங்கக்கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தன் எண்ணத்தில் தோண்றிய இந்த உருவாக்க  முயற்சி ஆரம்பத்தில் தோல்வி ஏற்படுத்திய  போதிலும் தொடர் முயற்சியினால் தனது எண்ணம் வெற்றியளித்துள்ளது கண்டு பெரு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
75 பேனை மூடிகளை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முலம் பெற்று பழுதடைந்த பொம்மையொன்றிலிருந்து பெற்ற சிறிய மின் மோட்டர் ஒன்றை பயன்படுத்தி தனது பகுதித்தலைவர் ஏ.ஏ.மஜீட் , ஆசிரியர்களான ஐ.எம்.உவைஸ் மற்றும் ஏ.ஸி.எம்.முனாஸ் ஆகியோரின் ஆலோசனையில் இந்த ரோபோவினை இந்த மாணவன் உருவாக்கியுள்ளான்.
எதிர்காலத்தில் இதனை ஆரம்பமாக கொண்டு பெரும் ஆக்க முயற்சியொன்றில் தான் ஈடுபடவுள்ளதாகவும் கல்வி விடயத்தில் அதிக அக்கறை செலுத்தும் வேளையில் ஓய்வு நேரங்களை தனது புத்தாக்க முயற்சிக்காக செலவிட்டு வருகின்றார்.
இவரது முயற்சிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கல்லூரி அதிபர் ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
Friday, October 19, 2012

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த ” வர்த்தக சந்தை ” இன்று ஆரம்பமானது.


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் வர்த்தகத்தை ஒரு பாடமாக கற்கும் தரம் 6 முதல் க.பொ.த. உயர்தர வகுப்பு வரையிலான மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த ” வர்த்தக சந்தை ” இன்று ஆரம்பமானது.
கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ. தௌபீக் பிரதம அதிதியாகவும் , பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவிகள் இவ்வர்த்தக கண்காட்சியினை பார்வையிடுவதற்காக திரண்டிருந்தனர்.
வர்த்தக  சந்தை  19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30  மணியுடன் நிறைவடையவுள்ளது.
கிழக்கில் பொதுமக்கள் மத்தியில் சுனாமி அச்சம்!

கிழக்கு மாகாண கடற்கரைகளில் மீன்கள் வந்து சுனாமி வந்து விடுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மட்டக்களப்பு கல்லடி, ஆரையம்பதி போன்ற பிரதேசங்களிலுள்ள பெருமளவு மீன்களும் பாம்புகளும் கரையொதுங்கியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, பாண்டிருப்பு, ஒலுவில், அறுகம்பை ஆகிய பகுதிகளி லும் நேற்று பெரு மளவு மீன்கள் பிடிப்பட்டன.
இந்த மீன்களை பெருமளவிலான பொது மக்கள் கரைக்கு சென்று எடுத்துச் சென்றதுடன் சில மீன் வியாபாரிகள் 2000 கிலோ மீன்களை கொழும்பு போன்ற பகுதிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
காத்தான்குடி கடற்கரைக்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ். ரி. ஜோர்ஜ் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கரையொதுங்கிய இந்த மீன்களை பார்வையிட்டு பரிசோதனை செய்ததுடன் இந்த மீன்கள் சாப்பிடுவதற்கு உகந்த மீன்கள் எனவும் தெரிவித்தனர்.
சூரை, வளையா, கீரி, லாகன், சூடை ஆகிய மீன்கள் அதிகம் பிடிபடுவதாகவும் இதனால் மீனின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்தே ஆழ்கடலில் இருந்து மீன்கள் கரையொதுங்கலாமென மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
2004ம் ஆண்டு சுனாமி ஏற்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பும் இவ்வாறானதொரு நிலை இருந்ததாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

Wednesday, October 17, 2012

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் அமைப்பதற்கான அங்கீகாரத்தினை பல்கலைக்கழக ஆணைக்குழு வழங்கியுள்ளது.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மைல்கல்லாக  பொறியியல் பீடம் அமைப்பதற்கான அங்கீகாரத்தினை பல்கலைக்கழக ஆணைக்குழு  வழங்கியுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மிக நீண்ட நாள் தேவைகளுள் ஒன்றாக காணப்பட்ட பொறியியல் பீடத்தினை அமைப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அந்த முயற்சி தற்போது வெற்றியளித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் பொறியியல் துறையில் கல்வி பயில்வதற்காக கொழும்பு மற்றும் பேரதெனிய பல்கலைக்கழகங்களுக்கே இதுவரையும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவ்வருடம் முதல் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களை சேர்ந்த  தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் இப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயிலும் சந்தர்ப்பத்தைப் பெறவுள்ளனர்.
இந்த வருடம் முதல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு்ள்ள பொறியியல் துறை மாணவர்களை முதற் தொகுதியாக கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள இப் பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகத்தில் செயற்படவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் துறையினை பெற்றுக் கொள்வதற்கு உதவிய அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக , பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக ,தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கே.எம்.இஸ்ஹாக் மற்றும் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோருக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு பாசறை.


கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான பாசறையொன்றினை இன்று ஒழுங்கு செய்திருந்தனர்.
2013 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள ” தேசத்திற்கு மகுடம் ” தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் போது மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படவுள்ள கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை முன்னெடுத்து செல்வதற்கு முன்னோடியாகவே இந்த பாசறை இடம்பெற்றது.
கல்லூரி இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான ஆசிரியர் எம்.எம்.எம்.ஜெலீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரியின் உதவி அதிபர் எம்.எஸ்.முஹமட் , பல்ஊடக தொழில்நுட்ப பொறுப்பாசிரியர் எம்.ஏ.சலாம் , கடல்சார் சுற்றாடல் உத்தியோஸ்தர் கே. சிவகுமார் ,  கள உத்தியோஸ்தர் எச்.பீ.எல்.எஸ். பண்டார மற்றும் சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் முன்னோடி உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் நாற்பெரும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.


சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் நாற்பெரும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும் , சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் சிறப்பு அதிதியாகவும் , அம்பாறை பிராந்திய வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் புரவலர் ஏ.எம்.றிஸ்வி விசேட அதிதியாகவும் , கல்முனை வலய பிரதி கல்விப்பணிப்பாளர்களான எம்.எஸ்.ஏ.ஜலீல் , எம்.சௌதுல் நஜீம் , உடற்கல்வித்துறை உதவிப்பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் , ஓய்வு பெற்ற அதிபர்களான ஐ.எல்.ஏ.மஜீட் மற்றும் ஏ.பீர்முஹம்மட் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் புங்கா , பாடசாலை முகப்பு பாதை என்பன திறந்து வைக்கப்பட்டதோடு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி பாராட்டியும் கௌரவிக்கப்பட்டார்.Tuesday, October 9, 2012

ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் உலக ஆசிரியர் நிகழ்வுகள்.


உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இன்று பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை பிராந்திய வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான அல் ஹாஜ் ஏ.எம்.றிஸ்வி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.